ஆகஸ்ட் 2ம் தேதி வரை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
மழை

இன்று தமிழ்நாட்டில்  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆகஸ்ட் 2 முதல் 5ம் தேதி வரை 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி தஞ்சாவூர்,  திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை  மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மழை

ஆகஸ்ட் 3ல் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும்.  இன்று முதல் ஆகஸ்ட் 1 வரை  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

5 மாவட்டங்களில் கன மழை

சென்னையில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?