கனமழை... குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு! ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு!

 
அசானி புயல்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகலிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக சென்னையிலும், புற நகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,  வடமேற்கு வங்க கடல் பகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள ஒடிசா மேற்குவங்க கடற்கரை பகுதிகளிலும் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உருவாகி வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உ.பி கன மழை

கடந்த சில தினங்களாக ஒடிசாவில் பேய்மழை பெய்து வருகிறது. ஒடிசாவில்மழை வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களாகவே கனமழையினால் ஒடிசா மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஒடிசாவில் கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை

கியோஞ்சர், சுந்தர்கர், தியோகர், அங்குல், பௌத், சம்பல்பூர், சோனேபூர், பர்கர், ஜார்சுகுடா போன்ற மாவட்டங்களில் கனமழை  பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று தினங்களுக்கு மயூர்பஞ்ச், ஜாஜ்பூர், தேன்கனல், கட்டாக், கந்தமால், கலஹண்டி, போலங்கிர், நுவாபாடா, நாயகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வரும் ஜூன் 28ம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web