கொட்டி தீர்த்த கனமழை.. புரட்டிப்போட்ட பெரும் வெள்ளம்.. 68 பேர் பரிதாப பலி!

 
ஆப்கானிஸ்தான் வெள்ளம்

ஆப்கானிஸ்தானில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம், பாக்லான் மாகாணத்தில் மழை மற்றும் வெள்ளத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

இந்நிலையில், கோர் மாகாணத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. முதல் கட்ட அறிக்கையின்படி, வெள்ளத்தில் சுமார் 68 பேர் இறந்ததாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக மாநில ஆளுநரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு
உள்ளன.விடுகள், குடியிருப்புகள், நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான விளைநிலம் மற்றும் பழத்தோட்டங்கள் வெள்ளம் சூழ்ந்து பாதிப்படைந்து உள்ளன. பாலங்கள், கால்வாய்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சுவர்களும் இடிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்து உள்ளன. பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!