இன்று கனமழை... தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

 
அடுத்த 48 மணி நேரத்தில் மஞ்சள் அலெர்ட்!! மக்களே கவனமா இருங்க!!

தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. இன்று ஜூன் 6ம் தேதி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்படுகிறது. நாளை (ஜூன் 7) தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 9-ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web