கனமழை... சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் பலியான சோகம்!

 
சுவர் இடிந்து சிறுவன் மழை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகின்ற நிலையில், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழைநீர் தேங்கிய சுரங்கத்திற்குள் காரில் சென்ற இளம்பெண், நீரிலேயே மூழ்கி பலியான சோகம் மறைவதற்குள், கனமழை காரணமாக ஓசூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூருவைப் போலவே கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் விடாது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

boy-dead-body

இந்நிலையில், கிருஷ்ணகிரி, ஓசூரில் பசவனத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான சுரேஷின் வீடு கடந்த தொடர்ச்சியான மழையினால் இடியும் தருவாயில் இருந்துள்ளது. தொடர்ந்து பெய்து வந்த மழையில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சுரேஷின் 3 வயது குழந்தை ரக்சித், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்துள்ள நிலையில், அலறியடித்தப்படி பெற்றோர், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

Police

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் குழந்தையின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web