சென்னைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை ... வெதர்மேன் பிரதீப் ஜான்!

 
பனி, மழை
 

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வானிலை நிலவரத்தை தொடர்ந்து பகிர்ந்து வரும் அவர், தன்னுடைய எக்ஸ் தளத்தில் சமீபத்திய பதிவை வெளியிட்டுள்ளார்.

மழை

அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழைக்குப் பிறகும், தென் மாவட்டங்களில் இன்று மழை தொடரும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், கிழக்கு காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகப் பகுதிகள்   சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

மழை

அதேபோல், டெல்டா மாவட்டங்கள் முதல் புதுவை கடற்கரை வரை நாளை முதல் மழை பெய்யும் என்றும், நவம்பர் 11, 12-ஆம் தேதிகளுக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும் எனவும் தெரிவித்துள்ளார். இதன்பின் நவம்பர் 18, 19-ஆம் தேதிகளில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்று பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!