கனமழை : தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 
வைகை, முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகளின் நீர் நிலவரம்..

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வைகை அணை திறக்கப்பட்டுள்ளதை. இதையடுத்து, வைகை அணையின் கரையோர பகுதிகளில் வசித்து வரும் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணை 71 அடி உயரம் உள்ள நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று நள்ளிரவில் வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியை எட்டியதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வரப்படுகிறது.

வைகை, முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகளின் நீர் நிலவரம்..

வினாடிக்கு 2,271 கன அடி நீர் அணையில் உள்ள 7 பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. ஏற்கெனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு 3 கட்டங்களாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் பாசனத்திற்கு வைகை அணை திறப்பு

இந்த நிலையில், தற்போது ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி வைகை அணையில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 33-வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web