கனமழை, பெருவெள்ளத்தில் உருக்குலைந்த உத்தரகாசி... இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!
கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் உத்தரகாசி மாவட்டம் முழுவதுமே உருக்குலைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று உத்தரகாசியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் நேற்று கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
VIDEO | Uttarakhand: Cloudburst in Kheer Ganga triggers devastation. Several feared swept away. More details awaited.
— Press Trust of India (@PTI_News) August 5, 2025
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/tKFQJX8Udq
இது குறித்து அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "தாராலி பகுதியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரும் இழப்புகள் குறித்த செய்தி மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாவட்ட நிர்வாகக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. அனைவரின் பாதுகாப்புக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று கூறினார்.
இந்நிலையில், இடிபாடுகளுக்குள் பலர் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தர்காசி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாக உத்தரவிட்டுள்ளது. இதன்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் தொடர்ந்து மூடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், வானிலைத் துறை தொடர்ந்து மழை பெய்யும் என்று கணித்திருப்பதாலும், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பிற்கு மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளித்துள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
