கனமழை: அரசு மருத்துவமனையின் தரைத்தளம் மூழ்கியது... ஐசியுவிலும் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி!
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், கேரளத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியது. மருத்துவக் கல்லூரியின் தாய் மற்றும் சேய் பராமரிப்பு மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த மருத்துவமனை கட்டிடம் உருவாகி அரைநூற்றாண்டு காலமாகியும், கட்டிடத்திற்குள் தண்ணீர் வருவது இதுவே முதல்முறை என ஊழியர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையின் கீழ் தளம் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து, தரைத்தளத்தின் வார்டுகளில் இருந்த குழந்தைகள் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கேரளாவில் கனமழை பெய்யும் என ஐஎம்டி எச்சரிக்கை விடுத்து ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவுகள், வார்டுகள், பெண்கள் ஐசியூ மற்றும் அவசர அறுவை சிகிச்சை அறை ஆகியவை தரை தளத்தில் அமைந்துள்ளன. தண்ணீர் முற்றிலும் தரைக்குள் நுழைந்தது. மூன்று மோட்டார் பெட்டிகள் கொண்டு வந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் இதில் ஈடுபட்டு நேற்று இரவு வரை பணி தொடர்ந்தது.

குழந்தைகளுக்கான ஐசியூவில் தண்ணீர் புகுந்தது. இங்கு பல உபகரணங்களை நிறுவியதால் தண்ணீரை வெளியேற்ற நீண்ட நேரம் தேவைப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளும் வெள்ளத்தில் மூழ்கின. இங்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கழிவறைக்குள் தண்ணீர் புகுந்ததால், நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பராமரிக்க வந்திருந்த உறவினர்களும் சிரமப்பட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
