சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை... வெள்ளக்காடாக மாறிய சாலைகள்!

 
மழை நீர்
 

தமிழ்நாடு முழுவதும் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே சென்னையின் புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது.

மழை

ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் இடையேயான போளிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம் தொடர் மழையால் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கனமழையின் போதும் இப்பகுதியில் தரைப்பாலம் மூழ்கி வருவதால் தரைப்பாலத்திற்கு பதிலாக மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 மாவட்டங்களில் கன மழை

தொடர் கனமழை காரணமாக வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மழை மேலும் தொடர்ந்தால் வீடுகளுக்குள் மழை நீர் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே ஊராட்சி நிர்வாகங்கள் சார்பாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web