ஆற்றில் உருவான பெருவெள்ளத்தால் அணை உடைந்து 35 பேர் பலி... பலர் மாயம்!

 
கென்யா

2024 ஆண்டு தொடக்கம் முதலே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில்  இயற்கை சீற்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  மழை, வெள்ளம், சுனாமி, எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம் என அடுத்தடுத்து மாறிமாறி வருகின்றன அந்த வகையில் 
கென்யாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கென்யாவின் நகுரு கவுண்டியில் உள்ள மாய் மஹியு அருகே மீட்புக் குழுக்கள்  உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  இது குறித்து நகுரு கவுண்டியின் ஆளுநர் சூசன் கிஹிகா இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  
கென்யாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 103 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பெருமழையினை அடுத்து மார்ச் முதல் ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள்  வீடுகளை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என  அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஐசக் மைகுவா முவாரா தெரிவித்துள்ளார்.  

கென்யா


கென்யாவில் ஏற்பட்ட பெருவெள்ளம் மக்களையும் வீடுகளையும் அடித்துச் சென்றதால், மை மஹியுவில் ஒரு பதட்டமான   சூழ்நிலை நிலவி  வருவதாக சூசன் கிஹிகா கூறியுள்ளார்.  "நாங்கள் நிலைமையைக் கையாள முயற்சிக்கிறோம், ஆனால் அது சற்று அதிகமாக உள்ளது, ஆனால் சிலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது.   
சமீபத்திய கனமழையால் சாலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதால், மை மஹியு தனித்தீவாக பிரிக்கப்பட்டுள்ளது.  வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கவும் மீட்பு குழுக்கள் போராடி வருகின்றன. இது குறித்து கென்யா செஞ்சிலுவைச் சங்கம், கமுச்சிரி கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பலர் மாய் மஹியுவில் உள்ள சுகாதார நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.   ஆற்றின் கரையை உடைத்ததில் இருந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது.  

கென்யா


கென்யாவில் மார்ச் நடுப்பகுதியில் தொடங்கிய கனமழை  கடந்த வாரத்தில்  தீவிரம் அடைந்தது.    கென்யாவின் பாதிப் பகுதிகளை வெள்ளம் அடித்துச் சென்றதால் சுமார் 131,450 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  
நைரோபியில் இருந்து படங்கள் மற்றும் வீடியோக்கள் கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை அல்லது திடீர் வெள்ளத்தால் அழிந்த வீடுகளில் இருந்து தங்களால் முடிந்ததை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதை காணலாம்.கிராமங்கள் முழுவதும்  நீருக்கடியில் மூழ்கிவிட்டது.  
கென்யாவில் பெய்து வரும் மழையால் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கென்யாவின் கல்வி  ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளும் புதிய பள்ளி பருவத்தின் தொடக்கத்தை மே 6 ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கும் எனத் தெரிவித்துள்ளது. கென்யா செஞ்சிலுவைச் சங்கம் மொரோரோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது கோனா புண்டாவில் படகு கவிழ்ந்ததில் 23 பேர் மீட்கப்பட்டனர்.  மற்றவர்கள் காணாமல் போனதாகவும் கூறியதாக சிஎன்என் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. மழை தொடங்கியதில் இருந்து 300 க்கும் மேற்பட்ட உடல்களை இதுவரை மீட்டதாக மீபு குழு அறிவித்துள்ளது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web