டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை.. வெள்ளத்தில் சிக்கிய எய்ம்ஸ் மருத்துவமனை.. பரிதாபமாக பலியாகும் சிறுவர்கள்!

 
டெல்லி மழை

டெல்லியில் 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. டெல்லியின் முக்கிய பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருப்பதால், பிரகதி மைதான சுரங்கப்பாதை பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.


டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையும் கனமழையில் இருந்து விடுபடவில்லை. மருத்துவமனை கட்டடத்தின் உள்ளே, நோயாளிகள் அறைகள் மற்றும் லிப்டுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக வசந்த விஹார் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த இரண்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் சிக்கினர். இதேபோல் நொய்டாவில் கட்டுமானப் பணியில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியின் நியூ ஒஸ்மான்பூர் பகுதியில் மழைநீரில் விளையாடச் சென்ற இரண்டு சிறுவர்கள் ஆழமான தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web