இமாச்சல பிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. சுமார் 115 சாலைகளை மூடியது அரசு!

 
இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தில் இன்று கனமழைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் 115 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன்படி, மண்டி பகுதியில் 107 சாலைகளும், சம்பா பகுதியில் 4 சாலைகளும், சோலன் பகுதியில் 3 சாலைகளும், காங்க்ராவில் ஒரு சாலையும் மூடப்பட்டுள்ளன.

மழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 212 மின் மாற்றிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. மேலும், மலைப்பகுதியில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழை பெய்யும் என்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web