உ.பி யில் பலத்த மழை.. ஒரே நாளில் மின்னல் தாக்கி 38 பேர் பலியான சோகம்!

 
உ.பி யில் பலத்த மழை.. ஒரே நாளில் மின்னல் தாக்கி 38 பேர் பலியான சோகம்!

உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 38 பேர் உயிரிழந்தனர். உ.பி.யின் முக்கிய மாவட்டங்களான பிரதாப்கரில் 11 பேர் உயிரிழந்தனர், அதைத் தொடர்ந்து சுல்தான்பூரில் 7 பேர், சந்தௌலியில் 6 பேர், மைன்புரியில் 5 பேர், பிரயாக்ராஜில் 4 பேர், அவுரியா, தியோரியா, ஹத்ராஸ், வாரணாசி மற்றும் சித்தார்த்நகர் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர்.

 மின்னல்

இதற்கிடையில், கிழக்கு உத்தரபிரதேசத்தின் சந்தௌலியில், மின்னல் தாக்கியதில் பலர் காயமடைந்து தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த புதன்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்கொலை

சுல்தான்பூரில் இறந்த ஏழு பேரில், மூன்று குழந்தைகள். நெல் நடவு செய்யும் போது அல்லது மாம்பழம் பறிக்க அல்லது தண்ணீர் எடுக்கச் சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. மரத்தடியில் தஞ்சம் புகுந்த பெண் ஒருவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உத்தரபிரதேசம் மற்றும் அதை ஒட்டிய யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்று கணித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web