உத்தரப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. 13 பேர் பரிதாபமாக பலியான சோகம்!

 
உத்தரப் பிரதேச மழை

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில், மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக நிவாரணத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் சனிக்கிழமை மாலை 6:30 மணி வரை ஃபதேபூரில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர். ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ரேபரேலி மாவட்டத்தில், மின்னல் தாக்கி ஒருவரும், மழை தொடர்பான சம்பவத்தில் ஒருவரும் உயிரிழந்தனர். புலந்த்ஷாஹர், கன்னாஜ், மைன்புரி, கௌசாம்பி, ஃபிரோசாபாத், பிரதாப்கர், உன்னாவ் மற்றும் மெயின்புரி மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 45 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்துள்ளதாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது.

ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிகபட்சமாக 65.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. நேபாளத்தில் சமீபத்தில் பெய்த கனமழையை கருத்தில் கொண்டு, நேபாள எல்லையில் உள்ள மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web