நாளை சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் உருவாகி நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் வரும் நாட்களில் பரவலாக மழை தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை நவம்பர் 17ம் தேதி சென்னை உட்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் நிலையில் உள்ளது. இதன் தாக்கத்தால் நாளை தமிழகத்தின் பெரும்பாலான கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றுக்கான தனிப்பட்ட மாவட்ட முன்னறிவிப்புகளில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்படத்தினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 18, 19, 20, 21 மற்றும் 22 தேதிகளிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ச்சியாக பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 18-ம் தேதி தென் தமிழகத்தில், 21-ம் தேதி வடக்கு மற்றும் மத்திய தமிழகத்தில் மழை தீவிரம் அதிகரிக்கும் என்பதும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
