இன்று 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!! அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி, தமிழகத்தின் மீது கீழடுக்குச் சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கமாக, வட மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசியின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரியில் பலத்த மழை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி! மேலும் 2 தினங்களுக்கு தொடரும் மழை!

நாளைய தினத்திலிருந்து மேலும் பல பகுதிகளில் மழை தீவிரமடையும். திங்கள்கிழமை வட, தென் தமிழகத்தின் சில இடங்கள், புதுவை, காரைக்காலில் மழை பெய்யலாம். செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (நவம்பர் 11, 12) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (நவம்பர் 12) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் பலத்த மழை பொழிய வாய்ப்பு உள்ளது.

மழை

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் கடலாடி மற்றும் தூத்துக்குடி காயல்பட்டினத்தில் 40 மில்லிமீட்டர் வரை மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் 30 மில்லிமீட்டர் வரை மழை அளவும் பதிவானது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!