இன்று தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு பரவலான மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுடன் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மழை

இன்று நவம்பர் 8ம் தேதி தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், நாளை நவம்பர் 9ம் தேதி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மழை

சில பகுதிகளில் திடீர் மின்னல், பலத்த காற்று ஏற்படும் சாத்தியம் உள்ளதால் மீனவர்கள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளை தென் மாவட்டங்களுக்கு புதிய மழை அலையால் நீர்ப்பாசன வசதிகளும், போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க