இன்று முதல் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் அறிவிப்பு!

 
மழை
இன்று ஞாயிறு விடுமுறை நாளில் பத்திரமா இருங்க. அவசியம் ஏற்பட்டாலொழிய தேவையில்லாம வீட்டை விட்டு வெளியே வராதீங்க. தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்காலங்களில் மின் சாதனங்களை ரொம்பவே கவனமுடன் கையாளுங்கள். குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை மழைக் காலங்களில் தனியே வெளியே அனுப்பாதீங்க. 

கன மழை

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைகாற்றில் வேக மாறுபாடு நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக இன்று ஜூன் 30ம் தேதி ஓரிரு இடங்களிலும், நாளை ஜூலை 1 முதல் ஜூலை 3ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட்டில் 13 செ.மீ., பந்தலூர், அவலாஞ்சி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு ஆகிய இடங்களில் 12 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் மேல் பவானி, ஊட் பிரையர் எஸ்டேட், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் 9 செ.மீ.,நீலகிரி மாவட்டம் செருமுள்ளி, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 8 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web