சீனாவில் கனமழை, நிலச்சரிவு... 10 பேர் பலி; 33 பேர் மாயம்!

 
மழை
 


சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனர். 

சீனாவின் கான்சு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக யொக்சங், லங்ஹொ நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனர். 

மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, கனமழை, வெள்ளப்பெருக்கால் மின்சாரம், தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?