ரூ.5,000 த்தில் ஹெலிகாப்டர் பயணம்... தமிழக சுற்றுலாத்துறையின் சூப்பர் திட்டம்!

 
ஹெலிகாப்டர்

தமிழகத்தில் பக்கத்தில் இருக்கிற பாண்டிச்சேரி, கேரளம், பெங்களூரு எல்லாம் சுற்றுலா மூலமாக கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர். தமிழகத்தில் சுற்றுலா மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு பல வாய்ப்புகள் இருந்தும், சரியான அரசு அதிகாரிகள் இதில் மெனக்கெடுவதில்லையோ என்கிற புலம்பல்கள் பொதுமக்கள் மத்தியில் பல காலங்களாகவே இருந்து வருகிறது.

ஊட்டி, கொடைக்கானல், பழநி, திருச்செந்தூர், மாமல்லபுரம், தஞ்சாவூர், குடவரைக்கோயில்கள், கொல்லிமலை, திருவண்ணாமலை, ஆனைமலை என்று இயற்கை விரும்பிகளையும், ஆன்மிக சுற்றுலா வருபவர்களையும், உடல் ஆரோக்கியத்தைத் தேடுபவர்களையும் என பலதரப்பட்ட வெளிநாட்டினரையும் ஈர்க்கும் எத்தனையோ விஷயங்கள் தமிழகத்தில் அதிகம் இருந்தாலும், அதில் நவீனப்படுத்துதலும், இவற்றைக் காண்பதற்கு முறையான திட்டமிடலும் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் குறைப்பட்டு வந்தனர்.

ஹெலிகாப்டர் கோவளம்

இந்நிலையில், சென்னையை அடுத்துள்ள கோவளம், முட்டுக்காடு பகுதிகளை ரூ.5,000த்தில் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.  

தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் சார்பில் முட்டுக்காடு படகு துறை, கேளம்பாக்கம், திருவிடந்தை போன்ற பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்த்து விட்டு வரும் வசதி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டரில் பயணம் செய்தவற்கு பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்ய ஒரு பயணிக்கு ரூ.5,000 கட்டணம் என்றும் பத்து நிமிடம் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.  

முதல் நாளில் மட்டும் 20 முறை ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது என்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் இதில் ஹெலிகாப்டர் மூலம் பறந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரம்மியமான காட்சிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web