அதிர்ச்சி வீடியோ... நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதி கோர விபத்து... 10 பேர் பலி!

 
ஹெலிகாப்டர்
மலேசிய கடற்படை தினத்தின் 90ம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த ஒத்திகையில்  கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி  வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடுவானில் ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டிருந்த போது ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் வால் பகுதியில்  மோதுகிறது.


இதையடுத்து, 2  ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கும் காட்சிகளும், ஹெலிகாப்டர்களின் துண்டுகள் காற்றில் பறக்கும் காட்சிகளும் பதைபதைக்க வைக்கின்றன.  இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒரு ஹெலிகாப்டரில் 7 பேரும், மற்றொன்றில் 3 பேரும் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  உயிரிழந்தவர்களின் உடல்களை ஹெலிகாப்டர்களில் இருந்து மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
மலேசிய கடற்படை தினத்தின் ஒத்திகை நிகழ்ச்சியில்  அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான  2  ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் கோர விபத்து ஏற்பட்டு 10 பேர்  பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web