அரியலூரில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹெலிபேட் அமைப்பு... ஏற்பாடுகள் தீவிரம்!
இந்திய பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு அரியலூரில் ஹெலிபேட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நாளை மறுதினம் ஜூலை 27ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தர உள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா ஐந்து நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் கடைசி நாளான 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தர உள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு அரியலூரில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி வரக்கூடிய ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் முன்னதாக குருபாலப்பர் கோவில் அருகே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
