வாகன ஓட்டிகளே உஷார்... புத்தாண்டு முதல் ஹெல்மெட் கட்டாயம்... மீறுபவர்களுக்கு வாகன உரிமம் ரத்து!

 
ஹெல்மெட்

 

சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் காவல்துறை அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில்  புதுச்சேரியில் 2025 புத்தாண்டு ஜனவரி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து   காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் ”இயற்கையின் எழில் கொஞ்சும் சிறந்த சுற்றுலாத் தலமான  புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

பூண்டு போலீசார் ஹெல்மெட்

குறிப்பாக, வார விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்களில் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி கடற்கரையில் குவிவது வழக்கமாக இருந்து வருகிறது.  புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்  2025 ஜனவரி  முதல் மீண்டும் கட்டாயம் என்ற திட்டத்தை காவல் துறையினர் அமல்படுத்த உள்ளனர். இது குறித்த  கண்காணிப்பு பணிகளில் போக்குவரத்து போலீஸார் இறங்கியுள்ளனர்.

ஹெல்மெட்

 

பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  வாகன ஓட்டிகள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் . மீறுபவர்களுக்கு ரூ1000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web