கடைகளில் விற்கப்படும் ஹெல்மெட்கள் 'ஐ.எஸ்.ஐ.' தரச் சான்று பெற்றவையாக இருக்க வேண்டும்... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரமான தலைக்கவசங்கள் மட்டுமே விற்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு புள்ளி விவரத்தின்படி, ஹெல்மெட் அணியாத காரணத்தால் 2022ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். தரம் குறைந்த ஹெல்மெட்களை அணிந்துகொண்டு செல்வதால் விபத்து ஏற்படும்போது தலைக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதில்லை. இந்த காரணத்தால், கடைகளில் விற்கப்படும் ஹெல்மெட்கள் அனைத்தும் 'பி.ஐ.எஸ்.'-இன் 'ஐ.எஸ்.ஐ.' தரச் சான்று பெற்ற ஹெல்மெட்களாக மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, சாலையோரமாக விற்கப்படும் பெரும்பாலான ஹெல்மெட்கள் தரம் குறைவான பொருள்களாகவே இருப்பதை அறிய முடிகிறது. அவற்றை இரு சக்கர வாகன ஓட்டிகள் வாங்கி அணிய வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தரமான தலைக்கவசங்கள் தயாரிக்காத தயாரிப்பாளர்கள் மற்றும் அவற்றை விற்கும் விற்பனையாளர்கள் மீது மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்தியா முழுவதும் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் அவற்றில் செல்வோரின் பாதுகாப்பே முக்கியம் என 'நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறையின்' அறிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!