அனைத்து பள்ளிகளிலும் உதவிப்பெட்டி... கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
கேரளா மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் உதவிப்பெட்டி வைக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி அறிவித்துள்ளார். அதில், மாணவ - மாணவியர் தங்களுக்குரிய பிரச்சனைகளை எழுதி போடலாம். வாரத்திற்கு ஒரு முறையேனும், உதவிப்பெட்டியை பள்ளி தலைமையாசிரியர் திறந்து பார்க்க வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் 4ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தந்தையும், சித்தியும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. வீடுகளில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க, சுரக்ஷா மித்ரம் என்ற பெயரில் இந்த செயல் திட்டத்தை அம்மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி அறிவித்துள்ளார்.

அவர் இது குறித்து விடுத்த செய்திக்குறிப்பில் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உதவிப்பெட்டி வைக்கப்படும். அதில், மாணவ - மாணவியர் தங்களுக்குரிய பிரச்சனைகளை எழுதி போடலாம். வாரத்திற்கு ஒரு முறையேனும், உதவிப்பெட்டியை பள்ளி தலைமையாசிரியர் திறந்து பார்க்க வேண்டும். புகார்கள் வந்திருந்தால், உடனடியாக அந்த தகவலை கல்வித் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
