உடனே கால் பண்ணுங்க... மழை குறித்த புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம். கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dear #Chennaiites,
— Greater Chennai Corporation (@chennaicorp) November 14, 2023
You can reach us at 1913 for any grievances and issues arising from heavy rainfall.
Please use hashtags #ChennaiCorporation and #ChennaiRains when posting on #SocialMedia for us to promptly address your concerns.
We are #HeretoServe! pic.twitter.com/iWka5oS0lh
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை திவைண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மழை விட்டு விட்டு பெய்யும்.
ஒரு சில இடங்களில் கனமழையும், புறநகர் பகுதிகளில் மிக கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை மாநகராட்சி. சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாகை பயன்படுத்தலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!