ஜார்கண்ட் முதல்வராக மீண்டும் பதவியேற்கும் ஹேமந்த் சோரன்.. வெளியான பரபரப்பு தகவல்!

 
ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜனவரி 31ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தாமதப்படுத்தியதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை.

ஜார்கெண்ட்  முதல்வர் ஹேமந்த்

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் ஜாமீன் கோரி ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் புதிய மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில், ஹேமந்த் சோரனின் தண்டனைக்கு போதிய காரணங்கள் இல்லை என்று கூறி உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. 5 மாதங்களுக்கு பிறகு ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சம்பாய் சோரன்

இந்நிலையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சி திரும்பியதும் தற்போதைய முதல்வர் சம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பிப்பார் என்றும் அதன் பிறகு ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அக்கட்சியின் இந்த முடிவில் தற்போதைய முதல்வர் சம்பை சோரனுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web