ஏய்... நிப்பாட்டு... நிப்பாட்டு... நடுரோட்டில் கட்டிலைப் போட்டு திமுக பிரமுகர் அடாவடி! முகம் சுளித்த பொதுமக்கள்!

 
கட்டில்

ஆலங்குடி அருகே பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு பின்னர் மண் அள்ளுமாறு கூறிய திமுகவைச் சேர்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர், தனி நபராக அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியகுளம் 28 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது இக்குளம். இந்த குளத்தில் கடந்த 15 நாட்களாக அரசு அனுமதியுடன் விவசாயப் பயன்பாட்டிற்காக மண் அள்ளி வந்தனர்.

கட்டில்

இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் கொத்தமங்கலம் கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கொத்தமங்கலம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவரான திமுகவைச் சேர்ந்த முத்துத்துரை என்பவர் திடீரென அந்த பகுதியில் வந்த அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். 28 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளத்தை பலர் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும், எந்த பயன்பாட்டிற்காகவும் மண் அள்ள அனுமதிக்கக் கூடாது எனக் கூறி கழுத்தில் கம்பீரமாக திமுக கட்சித் துண்டைப் போட்டுக் கொண்டு, சாலையின் நடுவே எந்த வாகனக்களும் செல்ல முடியாதவாறு கட்டிலைப் போட்டு கொண்டு அதில் அமர்ந்தவாறு தனி நபராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு அரசுப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் செல்வதற்கு வழியில்லாமல்  கொத்தமங்கலம் - கீரமங்கலம் சாலையில் காத்திருந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் போராட்டத்தில் ஈடுபட்ட முத்துத்துரையை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அகற்றினார்கள். இதனையடுத்து பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன.

கட்டில்

இந்த சம்பவம் காலை நேரத்தில் பணிக்கு சென்றவர்களை பெரிதும் பாதிப்படைய செய்தது. ஆளும் கட்சி பிரமுகரே இப்படி பொறுப்பில்லாமல் அராஜகத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்தனை நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருந்த மக்கள், இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு... குடிக்க காசில்லைன்னா... இப்படி ஏதாவது போராட்டத்துல இறங்கிடுவானுங்க... என்று தலையிலடித்துக் கொண்டு கிளம்பி சென்றார்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web