8வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி... விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
உயர்நீதிமன்றம் 10 நாட்கள் விடுமுறை!!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியில் சேர்வதற்கு ஆர்வமும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

"சென்னை உயர்நீதிமன்ற  வளாகம், சட்ட அலுவலர்கள் கட்டிடம், 3வது தளத்தில் அமைந்துள்ள அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இந்த பணிக்கு 8ம் பகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் அல்லாதவர்) மற்றும் (முன்னுரிமை அல்லாதவர்) [BC (other than BC Muslim) and (Non - Priority)] விண்ணப்பிக்கலாம்.

சென்னை உயர்நீதிமன்றம்

ஜூலை 1ம் தேதியன்று உள்ளவாறு 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் 34 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

பணிக்கான சம்பள விகிதம் ஊதிய நிலை – 1, ரூ.15,700/- ஆகும். இதற்கான விண்ணப்பத்தினை, "அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகம் , சட்ட அலுவலகர்கள் கட்டிடம் (3 வது தளம்), சென்னை – 600 104" என்ற முகவரிக்கு இம்மாதம் 25ம் தேதி மாலை 5. 45 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். 

விண்ணப்ப உறையின் மேல் "அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம்" என்று எழுதப்பட வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், கல்வித்தகுதிச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு (Self Attested) இணைக்கப்பட வேண்டும். 

சென்னை உயர்நீதிமன்றம்

விண்ணப்ப உறையினுள் முகவரியுடன் கூடிய ஒரு "Self envelope cover affixed with Rs. 50/- Postal Stamp" – வைத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!