காலில் ஹை ஹீல்ஸ்.. கழுத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ்.. வைரலாகும் ரன்வீர் சிங்கின் புது ஸ்டைல்!

 
ரன்வீர் சிங்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கவனத்தை ஈர்க்க பல விஷயங்களை செய்வார். திடீரென அரை நிர்வாண புகைப்படங்களை பகிர்வது, செக்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடிப்பது என இவரைப் பற்றிய பல விஷயங்கள் அடிக்கடி பேசப்படுகின்றன. ஆடைகளில் புதுப்புது ஃபேஷன்களை முயற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வரும் ரன்வீர், சமீபத்தில் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் ஹை ஹீல்ஸ்களை பார்த்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வெள்ளை நிற ஜிகுஜிக்கு உடை அணிந்திருந்த ரன்வீர் சிங், கழுத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, வெள்ளை உடைக்கு ஏற்ற ஷூக்களை அணியாமல், வெள்ளை நிற ஹை ஹீல்ஸ் அணிந்து அசத்தினார் ரன்வீர். ஹீரோயின்களைப் போலவே ஹீல்ஸ் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

இவரின் ஆடை ஒருபுறம் ரசிகர்களின் பாராட்டுகளை ஈர்த்தாலும், மறுபுறம் இணையவாசிகள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். 'என்ன, அவர் ஹீரோயின்ஸ்கே டஃப் கொடுக்கிறார் போல! தூக்கத்தில் தீபிகாவின் நகை, செருப்பு மாட்டிக்கொண்டதாக கிண்டல் செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web