சுயம்பு மூர்த்தி... திருமண வரம் தரும் மருதமலை முருகன்... இத்தனை சிறப்புக்களா?!

 
மருதமலை

தமிழ்க்கடவுளாம் முருகனுக்கு ஆறுபடை வீடுகள் என்றாலும் மருதமலை ஏழாவது படைவீடாக முருக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 837 படிகளுடன் அமைந்த மலைக் கோவில் இது. பாம்பாட்டி சித்தரால் வழிபடப்பட்ட சுயம்பு மூர்த்தியே இங்கு மூலவராக எழுந்தருளியுள்ளார். மருதமலையில் வரதராஜப் பெருமாளுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. பாம்பாட்டிச் சித்தர் சன்னிதி செல்லும் வழியில் சப்த கன்னியர் சன்னிதி உள்ளது.

மருதமலை

ஆடிப் பெருக்கிற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதுண்டு.  பாம்பாட்டிச் சித்தர் சன்னிதியில் உள்ள பாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி அளித்தார் என்கின்றனர் முருக பக்தர்கள். பாம்பாட்டி சித்தருக்கு மருத மலையில் முருகனின் அருள் கிட்டது. அதனால் அவர் இங்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளது.

மருதமலை

இத்தலத்தில் உள்ள விநாயகர் மற்றும் முருகனை வேண்டி, மரத்தில் மாங்கல்யக் கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால் திருமணம் கைகூடும். குழந்தைப் பேறு கிட்டும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

வைகாசி விசாகத்தில்  மருதமலை முருகனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும் மருதமலையில் தைப்பூசத்தை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.  தைப் பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த் திருவிழா நடப்பது கண்கொள்ளா காட்சி. அன்றையதினம்  சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருள்வார். மருத மலையில் தினமும் மாலையில் தங்க ரதத்தில் முருகப் பெருமான் வலம் வருவதை காண கண்கோடி வேண்டும் என்கின்றனர் முருக பக்தர்கள். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web