தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை... அரசு பரிசீலனை... குஷியில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள்!

 
தீபாவளி

தீபாவளிக்கு தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது. தமிழக அரசுக்கு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.

தீபாவளி

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமான விடுமுறை நாள் கணக்கில் வந்துவிடுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவித்தால், தொடர்ந்து 4 நாட்கள் தீபாவளிக்கு விடுமுறை கிடைத்துவிடும்.

தீபாவளி

தீபாவளியை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடிவிட்டு வருபவர்களுக்கு இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பது பண்டிகையைக் கொண்டாட வசதியாக இருக்கும். இம்முறை தீபாவளிக்கான விடுமுறையை முன்கூட்டியே அறிவித்தால், சொந்த ஊருக்கு செல்பவர்கள் ரயில், பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு என தங்களது பயணத்தை திட்டமிட வசதியாக இருக்கும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?