விருதுநகரில் ஆணவ கொலையா? மகளைக் காதலித்தவரைக் கொடூரமாக கொன்ற பெண்ணின் குடும்பத்தினர்!

 
தமிழரசன்

காதல் விவகாரத்தில் திருமண விழாவில் கலந்து சொந்த ஊர் வந்திருந்த வாலிபரைப் பெண்ணின் குடும்பத்தினர் கொலைச் செய்த சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகன் தமிழரசன் (26). கூலித்தொழிலாளியான இவர், நேற்று  வீட்டிலிருந்து வெளியே சென்ற பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. வெளியூர் எங்கேயாவது தமிழரசன் சென்றிருக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்திருந்தனர்.

மருமகனை விஷம் வைத்து கொலை செய்த மாமியார்!! பர பர வாக்குமூலம்!!

இந்நிலையில் புதுக்கோட்டையில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் தமிழரசன் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து எம்.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிழரசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சங்கரபாண்டி என்கிற அருண் (22), மணிகண்டன் (20), ரஞ்சித்குமார் (24), ஜெயசங்கர் (22), முத்துப்பாண்டி (22), செல்வம் (25), சுரேஷ் (42) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தவிர மற்ற 6 பேரை கைது செய்தனர்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

இந்த கொலை வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழரசன் தனது தாத்தா சங்கரலிங்கத்துடன் வசித்து வந்துள்ளார். ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த குடும்பத்துக்கும், தமிழரசனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதை தொடர்ந்து தமிழரசன் சேலத்துக்கு சென்று அங்கு வேலை செய்து வந்தார். உள்ளூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழரசன் வந்த போது, காதல் விவகாரத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக அவரை கொலை செய்துள்ளனர்” என்று கூறினார். தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?