கார்த்திகை மாத ராசிபலன்கள்... சூரியனின் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்!

 
கார்த்திகை ராசிபலன்கள்

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நவம்பர் 16ம் தேதி நுழைந்திருக்கும் நிலையில், சூரியன் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இந்த கார்த்திகை மாதத்தில் குறிப்பாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுகின்றனர்.

சூரியன் குரு

மேஷம்:

மேஷ ராசியின் 8வது வீட்டிற்கு சூரியன் செல்லும் போது, கார்த்திகை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை, பணியிலும் வெற்றி குவிக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் அல்லது குடும்பத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிவடையாமல் இருந்த வேலைகளுக்கு இந்த மாதத்தில் வாய்ப்பு வரும். மேலும் பரம்பரை சொத்துகள் அல்லது பணத்தில் நன்மைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

மிதுனம்:

மிதுன ராசியின் 6-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லும் போது, கார்த்திகை மாதம் உங்களுக்கு ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம், தலைமைத்துவ திறன்கள் பாராட்டப்படுவதைப் பெறுவீர்கள். தொழில், வணிகத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். எந்த வேலையும் வெற்றிகரமாக முடியும்.

சூரியனார் சூரியன்

கடகம்:

கடக ராசியின் 5வது வீட்டிற்கு சூரியன் செல்லும் போது, வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களை தரும். பணியிலும் வணிகத்திலும் முன்னேற்றம், இரட்டிப்பு லாபம் மற்றும் சேமிப்பு வாய்ப்புகள் அதிகரிக்கும். எந்த வேலையையும் கையில் எடுத்தாலும் வெற்றி பெறுவீர்கள்.

இந்த கார்த்திகை மாதம் மேஷம், மிதுனம் மற்றும் கடகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும், வேலை, பணியிலும் வெற்றி மற்றும் நிதி முன்னேற்றம் ஏற்படும் முக்கிய காலமாக அமையும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!