மீண்டும் பயங்கரம்... பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி…8 பேர் படுகாயம்!

 
பட்டாசு
 
விருதுநகர்  மாவட்டம் சாத்தூர் அருகே செவல்பட்டி கிராமத்தில், செப்டம்பர் 17ம் தேதி இன்று  பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் இலங்கைத் தமிழர் கெளரி. இவர் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 
பட்டாசு  தயாரிப்பு பணியின் போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.தகவலின் பேரில் விரைந்து வந்த உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, படுகாயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டின் பட்டாசு தயாரிப்பு மையமாக அறியப்படுகிறது, சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆலைகள் உள்ளன. இந்த விபத்து, பட்டாசு தொழிலில் பாதுகாப்பு நடைமுறைகளின் பற்றாக்குறை குறித்து அடிக்கடி நிகழும் விபத்துக்கள் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தை  உள்ளூர் தொழிலாளர் சங்கங்கள், பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விபத்து, சுற்றுப்பகுதி கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?