அதிர்ச்சி... காவலரை சூழ்ந்து கொண்டு கொடூர தாக்குதல்.. ராணுவ வீரர்கள் கைது!

 
பழனி

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (60). இவரது மகன்கள் பழனி (36), முருகன் (28), ஐயப்பன் (25). சுப்ரமணியின் மகன்கள் 3 பேரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கிராமத்தில் குலதெய்வ வழிபாட்டிற்காக ராணுவ வீரர்கள் 3 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி குலதெய்வ வழிபாடு முடிந்து கோவிலில் இரவு நாடகம் நடந்தது. அப்போது, அங்கிருந்த சிலருடன், இவர்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அங்கிருந்தவர்கள் அவர்களை பிரித்துவிட்டு சமாதானம் ஏற்படுத்தினர்.

பழனி

தொடர்ந்து, நேற்று முன்தினம் குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஐயப்பன், பழனி, முருகன், அவர்களது நண்பர் சரவணன் (28) ஆகிய 4 பேரும் சேர்ந்து சாலையில் தகராறு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கண்ணமங்கலம் முதல் நிலை காவலர் அன்பழகன் மதுவிலக்கு பணி சம்பந்தமாக கண்காணிப்பு பணி முடிந்து, காவல் நிலையம் நோக்கி கொண்டிருந்தார்.

பழனி

வழியில் இவர்கள் தகராறு செய்து கொண்டிருப்பதை பார்த்து, நடுரோட்டில் நின்று சண்டை போடாதீர்கள் என தடுத்துள்ளார். அப்போது, 4 பேரும் சேர்ந்து காவலரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவலர் அன்பழகன் அளித்த புகாரின்பேரில், 4 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web