இரவு விருந்தில் பயங்கரம்.. துப்பாக்கிச்சூட்டில் 3பேர் பலி.. தீவிர விசாரணையில் போலீசார்!

 
 அலபாமா துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் அலபாமாவில் மே தினத்தின் ஒரு பகுதியாக சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வுகள் ஸ்டாக்டனில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு சென்றிருந்தனர். அப்போது, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் திடீரென துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினர். இதனால் அங்கிருந்த மக்கள் பீதியில் அலறியடித்து ஓடத் தொடங்கினர். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் படுகாயம் அடைந்து கூட்ட நெரிசலில் சிக்கினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர்.

பின் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web