ப்ளீஸ்... வதந்தி பரப்பாதீங்க... துரை தயாநிதி உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை!

 
துரை தயாநிதி


தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் சகோதரர் அழகிரி. இவரது மகன் துரை தயாநிதி 2023  டிசம்பர் 6ம் தேதி திடீரென மயங்கி சரிந்தார்.  அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவில்  அனுமதித்தனர்.மருத்துவ பரிசோதனைக்கு பிறகு துரை தயாநிதிக்கு மூளையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் முதல்வரும்  நேரடியாக மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதி உடல் நலத்தை விசாரித்து அறிந்தார்.  

துரை தயாநிதி

இதன் பிறகு 3 மாத காலம் அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதி,  மார்ச்  14ம் தேதி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கும் கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வேலூரில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து, அவரை நேரில் சென்று சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.  

ஸ்டாலின்

அவருடைய உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.இதற்கு  முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், துரை தயாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரை தயாநிதியின் உடல் நல்ல நிலையில் இருப்பதாகவும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web