ஊராட்சி கடையை ஏலம் எடுத்ததால் விரோதம்.. பானி பூரி கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்!
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே உள்ள முல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் பானி பூரி வியாபாரம் மற்றும் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள ஒரு ஊராட்சி கடை ஏலத்திற்கு விடப்பட்டபோது, திருப்பதி கடையை ஏலம் எடுத்தார். கூடுதல் வாடகைக்கு கடையை ஏலம் எடுத்ததாகவும், இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு இது தொடர்பாக முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், திருப்பதி தனது இருசக்கர வாகனத்தில் வந்ததபோது, வழியில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. 8 பேர் கொண்ட கும்பல் திருப்பதியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த திருப்பதி, அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட திருப்பதி இந்தக் கதையைச் சொன்னபோது, கூடுதல் வாடகைக்கு ஊராட்சி கடையை ஏலம் எடுத்ததால், அரசியல் கட்சிப் பிரமுகர் ரமேஷ் மற்றும் 3 பெண்கள் உட்பட 8 பேர் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். தன்னைத் தாக்கியவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இது குறித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், பாதிக்கப்பட்ட தன் மீது வழக்குப் பதிவு செய்வதாக போலீசார் மிரட்டுவதாகவும் கூறினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!