வீட்டு வேலைகள் அத்துப்பிடி.. டெஸ்லாவின் அடுத்த படைப்பு.. இதன் விலையை தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான டெஸ்லா, மனிதர்களின் பணிகளை மிகவும் எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆப்டிமஸ் ரோபோக்களை சமீபத்தில் காட்சிப்படுத்தியது. "வீ ரோபோட்" நிகழ்ச்சியில், இந்த ரோபோக்கள் பார்வையாளர்கள் முன் பல தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்தின. இந்நிகழ்ச்சி கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க் மற்றும் பல தொழில்நுட்ப ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆப்டிமஸ் ரோபோக்களின் முக்கிய வேலைகள் வீட்டைச் சுற்றியுள்ள வேலைகளை முடிப்பதாகும். பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைச் சுத்தம் செய்தல், அலமாரிகளை அடுக்கி வைப்பது போன்றவை தானாகச் செய்யப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கு விளையாட்டுகளை காண்பிப்பது, செல்ல நாயுடன் நடந்து செல்வது போன்ற நெருக்கமான சேவைகளை வழங்குகின்றது. இதனால், அது வேலை செய்யும் கருவியாக மட்டுமின்றி நெருங்கிய நண்பராகவும் செயல்படும்.
ரோபோக்கள் நடனமாடி பார்வையாளர்களை வரவேற்றது மட்டுமின்றி, உணவு மற்றும் பானங்களை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. டெஸ்லாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆப்டிமஸ் ரோபோக்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதன் திறன்களும் செயல்பாடுகளும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியில் பேசிய எலோன் மஸ்க், இந்த ரோபோக்கள் மனித வாழ்க்கையை எளிதாக்கும் பல திறன்களைக் கொண்டுள்ளன. "அவை கற்பிக்கவும், பேசவும், பணிகளை அழகாகவும் செய்ய முடியும்," என்று அவர் குறிப்பிட்டார். இவை ஒரு மனிதனுடன் நெருக்கத்திற்கான வழிமுறையாக மாறும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆப்டிமஸ் ரோபோக்களின் விலை இந்தியாவில் ரூ.17 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரை இருக்கும். டெஸ்லா அதன் தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் செயல்பாடுகள் எதிர்காலத்தில் மக்களின் வீட்டு வேலைகளை எளிதாக்கும் ஒரு புதிய அடையாளமாக மாறும் என்று நம்புகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
