144 தடை உத்தரவு!! பற்றி எரியும் வீடுகள்.. ரயில்சேவை துண்டிப்பு!! அச்சத்தில் பொதுமக்கள்!!

 
மணிப்பூர்

ஒட்டுமாத்த இந்தியாவும் திரும்பிபார்க்கும் அளவுக்கு நிலைமை மோசமாக மாறியுள்ளது மணிப்பூர் மாநிலத்தில். அங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்குஇரையாகின. மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். அப்படி என்னதான் நடக்கிறது இந்த மணிப்பூரில் என பார்க்கலாம்.மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பழங்குடியின மலைவாழ் மக்கள் பேரணி நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது கலவரமாக வெடித்தது. பழங்குடியின மக்கள் மீது கமாண்டோ படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மணிப்பூர்

பற்றி எரிந்து வன்முறை அதிகம் சூழ்ந்த சுராசந்த்பூர் பகுதியில் வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கா வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலமானது. இதனால் மக்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர். சுராசந்த்பூர், பிஸ்னுபூர், இம்பால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

எனினும் ஆங்காங்கே வன்முறை தொடர்ந்ததால், மேலும் பராமல் இருக்க கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட்டுத்தள்ள ஆளுநர் அனுசுய உக்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அங்கு வெடித்த கலவரம் தற்போது ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர்

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள வடகிழக்கு எல்லை ரயில்வே, நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை எந்த ரயிலையும் இயக்க வேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டது. இதனால் அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web