இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தம்...!

 
இஸ்ரேல்
 

காஸா பகுதியில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதையடுத்து, இஸ்ரேல் தனது தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் நகரங்கள் மற்றும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வந்தனர்.

செங்கடல் மற்றும் அரபிக்கடல் வழியாகச் சென்ற இஸ்ரேல் கப்பல்களின் பாதையை முடக்கும் நடவடிக்கைகளையும் ஹவுதிகள் தொடர்ந்து செய்தனர். ஆனால் தற்போது, ஹமாஸ் படையினருக்கு அனுப்பிய கடிதத்தில், “செங்கடல் பகுதியில் இஸ்ரேல் கப்பல்களின் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் மேலும், “இஸ்ரேல் மீண்டும் காஸா மீது வன்முறை நடவடிக்கைகள் மேற்கொண்டால், நாங்கள் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவோம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஹவுதி அமைப்பின் சார்பில் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!