எவ்ளோ பெருசு.. காலணி வடிவ கண்ணாடி தேவாலயம்.. குவியும் மக்கள்.. சுவாரஸ்ய பின்னணி!

 
காலணி வடிவ கண்ணாடி தேவாலயம்

காலணி வடிவ கண்ணாடி தேவாலயம் தைவானின் சியாயி கவுண்டியில் அமைந்துள்ளது. தேவாலயத்தை பிரார்த்தனை கூடம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் இது வழக்கமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படாது. மாறாக திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் மற்றும் திருமண விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

காதலர் நாற்காலி, பிஸ்கட், கேக்குகள் போன்றவை இந்தக் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இது 32 க்கும் மேற்பட்ட வண்ண கண்ணாடி பேனல்களால் ஆனது. பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. 1060 களில், வாங் என்ற 24 வயது பெண் கருங்கால் நோயால் பாதிக்கப்பட்டார், இதனால் அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டது.

இதனால் அந்த பெண்ணின் திருமணம் நின்று போனது. பெண் தனது வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் கோயிலில் கழித்ததாக கூறப்படுகிறது. இந்த தேவாலயம் அவர் நோயினால் பாதிக்கப்பட்ட காலத்தை நினைவுபடுத்துவது மட்டுமின்றி, பெண்கள் தங்கள் மகிழ்ச்சியான எதிர்காலத்தை நோக்கி நடைபோட முடியும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகவும் காலணி வடிவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web