குற்ற வழக்கில் தொடர்புடையவரை இயல்பாக நடமாட அரசு எப்படி அனுமதித்தது? தேசிய மகளிர் ஆணையம் கேள்வி!
நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரில் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குழுவினர், அண்ணா பல்கலைக்கழகத்தில் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர். மாணவி வன்கொடுமை நடைபெற்ற இடத்திலும் விசாரணை குழு நேரில் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.
பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், போஷ் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் முதற்கட்டமாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குழுவினர் விசாரணை நடத்தி உள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளிடமும், பல்கலைக்கழக காவலாளிகள், விடுதி காப்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மாணவியின் பெற்றோர், மாணவியின் ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வன்கொடுமை நடைபெற்ற இடத்திலும் விசாரணை குழு நேரில் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் குற்ற வழக்கில் தொடர்புடையவரை இயல்பாக நடமாட அரசு எப்படி அனுமதித்தது? என்று தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!