இந்தியன் 2 படம் எப்படியிருக்கு? | சொதப்பிய முதல் பாதி; மிஸ் பண்ணக்கூடாத காட்சிகள் !

 
இந்தியன் 2
 

கமல்ஹாசனின் அரசியல் திரில்லரைப் பார்க்கும் முன் படிக்க வேண்டிய ட்வீட்கள்
இன்று திரையரங்குகளில் இந்தியன் 2 வெளியாகியுள்ள நிலையில், முதல் பாதி படம் திரையரங்குகளின் இருக்கையில் ரசிகர்கள் நெளிய வைப்பதாகவும், வழக்கமான ஷங்கர் படத்தைப் போல திரைக்கதை அத்தனை விறுவிறுப்பாக இல்லை என்றும் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்து புலம்புகின்றனர். 
இன்று காலை முதலே முதல் நாள் மற்றும் முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்குகளில் முண்டியடித்தனர். 


இந்தியன் 2 சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளது. கமல்ஹாசன் இதுவரை கண்டிராத அவதாரத்தில் பவர்பேக் ஆக்‌ஷன் காட்சிகளுடன் காட்டப்படுவார் என்று உறுதியளிக்கப்பட்டது.
அரசியல் த்ரில்லர் படமாக வெளியாகியுள்ள இந்தியன் 2 குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது. அவர்களில் பெரும்பாலோர் பழம்பெரும் கமல்ஹாசனின் நடிப்பு, கதைக்களம் மற்றும் திரைக்கதை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டாலும், ஒரு சிலர் முழு ஏமாற்றத்துடன் திரையரங்குகளை விட்டு வெளியேறி படத்தை 'ஓவர்ரேட்டட்' என்று விமர்சித்து வருகின்றனர். படத்தால் ஈர்க்கப்பட்ட பயனர் ஒருவர், 'கமல்ஹாசன் நடிப்பு சிகரங்களைத் தொட்ட நிகழ்ச்சியுடன் முடிந்தது #ஷங்கர் தவறவிட்டார் #சித்தார்த் #ரகுல் நன்றாக செய்தார் " என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியன் 2


படத்தில் பெரிய பலமாக அனிருத் பிஜிஎம் இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. சில காட்சிகளில் கேமிரா வசீகரித்து, பிரம்மிக்கவும் செய்கிறது. படத்தின் எடிட்டிங் ரொம்பவே சுமார் என்றும், ஸ்கிரீன் ப்ளே, கதை என ஷங்கர் இந்த முறை சொதப்பி இருக்கிறார் என்றும் ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!