அதிர்ச்சி வீடியோ.... ஈரானின் 300 ட்ரோன்களை அழித்தது எப்படி?

 
ஈரோன்
 

மத்திய கிழக்கு நாடான சீரியாவில்  ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை ஈரான் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.  லெபனான் மற்றும் ஈரான் நாடுகள்  தங்கள் வான்வழியை மூடியுள்ளன. சீரியா, ஜோர்டான் நாடுகளும்  தங்கள் வனப்பகுதியை தயார் நிலையில் வைத்திருந்ததாக தெரிகிறது.  


ஈரானிலிருந்து 1800 கிமீட்டர் தொலைவில் உள்ள இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த  ஆளில்லா விமானங்கள் ட்ரோன்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 99 சதவீத ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகள்  இஸ்ரேல் வான்வழியை அடைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படும் வீடியோ படங்களையும் தமது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  ஈரான் நடத்திய அதிரடி தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் உதவி செய்து  வருகின்றன.

ஈரான் ஏவுகனை


இந்த தாக்குதல் பேரழிவு மற்றும் மிகப்பெரிய ஆபத்துக்கான ஆரம்ப எச்சரிக்கை தான் என   ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார். சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஈரானால் ஏவப்பட்டன.   இருநாடுகளுக்கும் இடையேயான கணக்கு சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தங்களை திருப்பி தாக்கினால் தடுக்க முடியாத அளவிற்கு வலுவான தாக்குதல் நடத்தப்படும் எனவும்  ஈரான் அறிவித்துள்ளது. ஆனால் எந்த தளங்களிலிருந்து ஈரான் ஏவுகணைகளை ஏவியதோ அவற்றை அழிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக   தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web