மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எத்தனை சீட்?

 
இந்தியை திணிக்க முயன்றால் இந்தியா பல நாடுகளாக சிதறும்: வைகோ எச்சரிக்கை
 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து திமுகவுடனான உடன்பாட்டின் போது முடிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.  சென்னையில் 2025 ஜூன் 29 ம் தேதி  நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்திற்குப் பிறகு  “நாங்கள் திராவிடக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள். திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடர்வோம்.


எத்தனை தொகுதிகள் வேண்டும் என இதுவரை எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை,” என தெளிவுபடுத்தியுள்ளார்.  வைகோ மேலும் கூறுகையில், தமிழ்நாட்டில் பாஜகவால் வளர முடியாது எனவும்  இது திராவிட மண் என்றும் வலியுறுத்தியுள்ளார்.  “இந்துத்துவ சக்திகளை எதிர்க்கவே திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பில்லை,” எனக் குறிப்பிட்டார்.  


மதிமுகவின் திருச்சி எம்.பி. துரை வைகோ, முன்னர் 12 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகக் கூறியதாக வெளியான செய்திகளை மறுத்த வைகோ, “எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும் எனில்  அதற்கு ஏற்ப தொகுதிகளைப் பெற விரும்புவதாக மட்டுமே கூறினோம். இரட்டை இலக்கில் தொகுதிகள் கோருவதாக வெளியான செய்தி தவறானது,” என தெரிவித்துள்ளார்.  
மதிமுகவின் இந்த அறிவிப்பு, 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்  தொடர்ந்து பங்கேற்பதை உறுதிப்படுத்துகிறது. 2021 தேர்தலில், மதிமுகவுக்கு திமுக ஆறு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது,இந்த முறை, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், மதிமுகவின் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் கட்சி நிர்வாகிகளிடையே உள்ளதாகத் தெரிகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?