மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களில் எவ்வளவு வட்டி... எதிர்காலம் எப்படியிருக்கும்?

 
பென்ஷன் மூத்தகுடிமக்கள்

அறுபது வயசைக் கடந்த பிறகு, அடுத்த தலைமுறை நம்மை எப்படி பார்க்கும் என்பது நிச்சயமில்லை. மன ரீதியில் மட்டுமல்லாமல், பண ரீதியிலுமே தனிமை வாய்த்தால், வயோதிகம் சாபமாக மாறி விடும். அடுத்த தலைமுறையைக் குறைச் சொல்லாமல் கடந்து செல்ல பழக வேண்டும். அதே சமயம் கையிருப்பு சேமிப்பும் இருக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (SCSS) 2004 முதல் மே 2023 வரையிலான வட்டி விகித வரலாற்றை பார்ப்போம். தற்போதைய SCSS வட்டி விகிதம்  8.2 சதவிகிதம் மட்டுமே என்றாலும், இந்தத் திட்டம் ஒரு காலத்தில் மூத்த குடிமக்களுக்கு 9.3 சதவிகிதம் வட்டியை வழங்கியது. ஆனால் வைப்புத் தொகை  வரம்பு ரூபாய்15 ஆக இருந்தது. 2023-24 நிதியாண்டிலிருந்து தனிநபருக்கு SCSS வைப்பு வரம்பை தற்பொழுது ரூபாய் 30 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது.

SCSS வட்டி விகிதங்களின் வரலாறு 02-08-2004 முதல் 31-03-2012 வரை மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கு வட்டி விகிதம் 9 சதவிகிதமாக இருந்ததைக் காட்டுகிறது. 01-04-2012 முதல் 31-03-2013 வரை, SCSS வட்டி விகிதம் 9.3 சதவிகிதமாக சற்றே அதிகரித்தது. இருப்பினும், 01-04-2013 மற்றும் 31-03-2015 க்கு இடைப்பட்ட காலத்தில் 9.2 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

பணம் ரூபாய்

கடந்த 19 ஆண்டுகளில், SCSS வட்டி விகிதம் 9.3 சதவிகிதம் முதல் 7.4 சதவிகிதம் வரை மாற்றத்தை கண்டிருக்கிறது. 01-04-2015 மற்றும் 31-03-2016 க்கு இடைப்பட்ட காலத்தில் விகிதம் மீண்டும் 9.3 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், 01-04-2016 மற்றும் 30-09-2016 இடையே மீண்டும் 8.6 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. பின்னர்  01-10-2016 மற்றும் 31-03-2017 க்கு இடையில் 8.5 சதவிகிதமாக இருந்தது. 01-04-2017 முதல் 30-06-2017 வரை, SCSS வட்டி விகிதம் 8.4 சதவிகிதமாகவும், 01-07-2017 மற்றும் 30-09-2018 க்கு இடைப்பட்ட காலத்தில் 8.3 சதவிகிதமாகவும் இருந்தது. இப்படி தொடர்ந்து மாறுதல் அடைந்து கொண்டே வருகிறது இது பணவீக்கத்திற்கு தகுந்தார் போல மாற்றி அமைக்கப்படுகிறது.

கொரோனோ தொற்று காலத்தில் பொருளாதாரம் பாதித்ததால், SCSS வட்டி விகிதம் 7.4 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இது 2004 க்குப் பிறகு மிகமிகக் குறைவு. இருப்பினும், SCSS வட்டி விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. 01-10-2022 மற்றும் 31-03-2023 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரசாங்கம் இந்த விகிதத்தை 8 சதவிகிதமாக  மாற்றியுள்ளது. இந்த விகிதம் இப்போது 8.2 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மூத்த குடிமக்கள் வரும் மாதங்களில் மேலும் உயர்வுகளை எதிர்பார்க்கின்றனர்.

பென்ஷன் மூத்தகுடிமக்கள்

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் SCSS கணக்கில் ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்ய தகுதியுடையவர்கள். அவர்கள் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வருமானத்தை பெறலாம். கணக்கு 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஆனால் அதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். தற்பொழுது கணக்கின் காலம் முழுவதும் வட்டி மாறாமல் இருக்கும்படி திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. அப்புறம் என்ன..?  தேவையில்லாமல் தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்படாமல் வயதான காலத்தில் வரும் வட்டியை வைத்துக் கொண்டு நிம்மதியான வாழ்கைக்கு இன்றே திட்டமிட துவங்குங்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web