நீல நிற ஆதார் அட்டையை பெற விண்ணப்பிக்கும் முறை!!

 
நீல நிற ஆதார்

இந்தியக் குடிமகன் அடையாள சான்றாக ஆதார் இருந்து வருகிறது. இந்த ஆதார் அட்டை இந்தியாவில் அரசு மானியங்கள் மற்றும் அரசு நடத்தும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்குத்  தேவையான ஆவணங்களில் ஒன்று. இதில்  முழுப்பெயர், நிரந்தர முகவரி மற்றும் பிறந்த தேதி உட்பட   குடிமக்கள் பற்றிய முக்கியத் தகவல்கள் உள்ளன.  இது பல்வேறு தேவைகளுக்கு முக்கியமான அடையாளச் சரிபார்ப்பு ஆவணமாகக் கருதப்படுகிறது.

நீல நிற ஆதார்


இந்த ஆதார் அட்டையில் ஒவ்வொருவருக்கு தனித்துவமான 12இலக்க எண்ணைக் கொண்ட ஆதார் அட்டை ஆதார் ஆணையம்  மூலம் வழங்கப்படும். ஆதார் ஆணையம் 2018ல் நீல ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அரசின் நலத் திட்டங்களில் சிறு குழந்தைகளைச் சேர்ப்பதில் நீல நிற ஆதார் அட்டை மிகவும் முக்கியமானது. இந்த ஆதார் அட்டையின் முக்கிய அம்சம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் தரவுகளை வழங்கத் தேவையில்லை.  பெற்றோரின் ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு நீல நிற ஆதார் அட்டையைப் பெறலாம்.

ஆதார்
 இதனை பெற விரும்புபவர்கள்  ஆதார் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  uidai.gov.in க்குச் சென்று நீல நிற ஆதார் பெற விண்ணப்பிக்கும் படிவத்தில் தகவல்களை  நிரப்பி, பதிவு செய்வதற்கான அப்பாயிண்ட்மெண்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.  அருகிலுள்ள ஆதார் பதிவு  மையத்தில் பெற்றோரின் ஆதார், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலைச் சமர்ப்பிக்கலாம்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web